சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினம்

இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனனதின நிகழ்வும் சிறப்பு மலர் வெளியீடும் (03) நடைபெற்றது.

 

மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்றுப்பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலையருகே மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.

 

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *