கைலாசாவின் பிரதமர் மா நித்யானந்தமயி சுவாமிகள், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு விஜய்க்கும், அவரது கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கைலாசாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டு மக்களின் நலன், வளம் மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பான ஆட்சியை வழங்கிட தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புதிய நிர்வாகம் தெளிவு, வலிமை மற்றும் தர்ம அடிப்படையிலான தலைமைத்துவத்துடன் தமிழ்நாட்டை வழிநடத்திட, இந்து மதத்தின் உன்னத ஆன்மிகத் தலைவர் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருள் எப்போதும் நிலைக்க வேண்டுமென பிரார்த்தித்துள்ளார்

