பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும் நிகழ்வு

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டப்பட்ட பகுதிகளில் தனக்கான இடம் – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும் நிகழ்வு துரித கதையில் முன்னெடுக்கப்பட்டது.

 

குறித்த நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் Thiraviyaraj Rasarethinam அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இன் நிகழ்வில் பிரஜா சக்தி தவிசாளர் Sugirthakumar Vijayarajah மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் Rasarathnam Ratheesan ,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் பிரஜா சக்தி உறுப்பினர்கள் கிராம சேவகர்கள் கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள் பயணாளிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *