கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கலந்துரையாடல்

அனர்த்த முன்னாயுத்தம் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் World Vision இன் நிதியுதவியில் டித்வா புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலக பிரிவினைச்சேர்ந்த பொது அமைப்புக்கள் மற்றும் கிராமஅலுவலர்களுக்கு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த முன்னாயுத்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.அழகக்கோன், மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன் ,World Vision மாவட்ட முகாமையாளர் யூட் நிசாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *