புனித வெசாக் வாரத்தை முன்னிட்டு தன்செல் நிகழ்வுகள் முன்னெடுப்பு  

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெசாக் நிகழ்வுகள் மிகவும் அமைதியாகவும் ஆசீர்வாதம் வேண்டி கருணை நோக்குடன் தாக சாந்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

மட்டக்களப்பு நகரில் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் இம்முறை புனித வெசாக் தினத்தை கொண்டாடும் முகமாக வெசாக் அலங்காரக் கூடுகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

 

இதே வேளை மட்டு நகரில் இன்று நிறுவனங்களினால் தாக சாந்தி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

இதன் போது குளிர்பானம் மற்றும் கேக் வகைகள் என்பன பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *