மட்டக்களப்பு மாவட்ட விவசாய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட விவசாயப்பணிப்பார் எம்.ஏப்.ஏ.சனீரின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(06) இடம்பெற்றது.
14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் விவசாய முன்னேற்ற அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றன.
மேலும் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் சி. தனிநாயகம், மாவட்ட செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை மாவட்ட விவசாயப்பணிப்பாளர் தெளிவூட்டினார்.

