கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று(07) இரவு வயல்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை மீட்டதுன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை இன்று(08) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

