17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று(11) காலை தற்காலிக சபாநாயகரான கருப்பையா தலைமையில் கூடியது. அதில் பங்கேற்பதற்காக கோட் சூட் அணிந்து சென்ற தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டு சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக கோட் சூட் அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சராக விஜய் கருதப்படுவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று சட்டசபை கூடியதும், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சபாநாயகர், “தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, புதிதாக தெரிவுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, புதிதாக தெரிவுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் முதலிய 9 அமைச்சர்களும் அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

