சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடி, பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் நிற்காமல், பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் அல்லது மூடிய இடங்களுக்குள் இருக்கவும்.
வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பிரதேசங்களில் தங்குவதைத் தவிர்க்கவும்.

