கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, ‘தமிழின அழிப்பு நாள்’ நேற்று (12) மாலையில் கொட்டும் மழைக்கு மத்தியில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தூபிக்கு முன்னால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கஞ்சி வார்த்தை ஆரம்பித்து வைத்தனர்.

 

 

கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்த்தை உணர்வு பூர்வமாக

ஆரம்பித்து வைத்தார்.

 

இதன் போது மழையையும் பொருட்படுத்தாது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் எதிர்கால சந்ததியினர் ஆர்வமாகக் கலந்து கொண்டனர் இவர்களுக்கு கடந்த 17 வருடத்துக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பை தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் விளங்கப்படுத்தினார்.

 

 

மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் எதிர்வரும் மே 18-ம் திகதி வரை இந்த கஞ்சி வழங்கும் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *