மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ( 22 ) திகதி நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக
மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்.எச்.எம்.எம்.இல்ஹாம் பலாஹி BA, அருட்தந்தை ஏ.யேசுதாஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்விற்கு விசேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலகத்தின்
நிர்வாக உத்தியோகத்தர் எம்.ரஹூப், மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி
வடிவேல் ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர.
இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்.எச்.எம்.எம்.இல்ஹாம் பலாஹி BA, அருட்தந்தை ஏ.யேசுதாஸ் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஆரம்பகால உறுப்பினர்களாக செயற்பட்டு சங்கத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக சங்கத்தின் முன்னால் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


.

