இந்தியாவின்  ஜ.என்எஸ். கடற்படை கப்பல் இலங்கை வருகிறது

இந்தியக் கடற்படையின் ‘நட்புறவுப் பாலங்களை’ (Bridges of Friendship) உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, இந்தியக் கடற்படைக் கப்பலான சுனைனா (INS Sunayna), ‘IOS சாகர்’ எனும் பெயரில் கொழும்பு துறைமுகத்தை நாளை (15) வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்தக் கப்பலில் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினர் (Multinational crew) இடம்பெற்றுள்ளனர். இந்த வரிசைப்பயணத்தின் (Deployment) இரண்டாவது பதிப்பில், ஐ.என்.எஸ் சுனைனா மேற்கொள்ளும் ஏழாவது துறைமுக அழைப்பு (Port call) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *