சீரற்ற காலநிலை; நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

கடந்த மே 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதியிலேயே இந்த வீடமைப்புச் சேதங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

அத்துடன், சீரற்ற காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

மாவட்ட வாரியாக பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் பின்வருமாறு:

 

களுத்துறை மாவட்டம்: 78 வீடுகள்

 

மட்டக்களப்பு மாவட்டம்: 25 வீடுகள்

 

இரத்தினபுரி மாவட்டம்: 12 வீடுகள்

 

காலி மாவட்டம்: 06 வீடுகள்

 

கொழும்பு மாவட்டம்: 05 வீடுகள்

 

மொனராகலை மாவட்டம்: 04 வீடுகள்

 

யாழ்ப்பாணம் மாவட்டம்: 04 வீடுகள்

 

கம்பஹா மாவட்டம்: 03 வீடுகள்

 

ஹம்பாந்தோட்டை மாவட்டம்: 02 வீடுகள்

 

அனுராதபுரம் மாவட்டம்: 02 வீடுகள்

 

இதேவேளை, தொடரும் இந்த அனர்த்த நிலைமை காரணமாக நாடு முழுவதும் 48 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *