முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிரானில் நடைபெற்றது.
வலிகள் சுமந்த மாதம் மே12 தொடக்கம் மே18 வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தோறும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
தாயக செயலணியினால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அக வணக்கம், மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டது.
பின்னர் பொது மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் அகதிகளாக இருந்த மக்கள் உணவின்றி தவித்தபோது உப்புக் கஞ்சியை தயார் செய்து அருந்துவதற்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காத்திருந்த வேளை அரசின் செல் வீச்சிற்கு இலக்காகி பலர் உயிரிழந்தனர்.
அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு வருடம் தோறும் நினைவு கூறப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் பிரதேச சபை உறுப்பினர் சன்முகநாதன், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் அருட் பணி எனோஷன் மற்றும் தாயக செயலணியின் மாவட்ட செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

