மாலைதீவில் கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் ஆபத்தான குகையை ஆய்வு செய்ய முயன்ற இத்தாலி நாட்டு நீச்சல் வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாலத்தீவின் வாவூ அட்டோல் பகுதியில் அமைந்துள்ள அலிமாதா தீவுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வீரர்கள் சுமார் 50-60 மீட்டர் (அடி) ஆழத்தில் உள்ள நீருக்கடியிலான குகை அமைப்பை ஆய்வு செய்துள்ளனர்.
பலியானவர்களில் 4 பேர் இத்தாலியின் ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியல் பேராசிரியர் மோனிகா மான்டேபால்கோன், அவரது மகள் ஜியோர்ஜியா சோமாகல் மற்றும் ஆய்வாளர்கள் ஆவர். ஐந்தாவது நபர் ஒரு மூத்த டைவிங் பயிற்றுநர் ஆவார்.
கடலில் ஏற்பட்ட சீரற்ற மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் மற்றும் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் மிகவும் சவாலாக இருந்தன.
இதுவரை ஒருவரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு பேரின் உடல்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எதிர்பாராதவிதமாக குகைக்குள் வழி தவறியிருக்கலாம் அல்லது ஆபத்தான நீரோட்டத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

