யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதி, இன்றும் நாளையும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கம் மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் இதனை அறிவித்துள்ளார்.
சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவை அவசரமாக சீரமைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

