இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வாழைச்சேனை கிளையின் வருடாந்த பொதுக் கூட்டமும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (16) இடம்பெற்றது.
வாழைச்சேனை கிளையின் பொறுப்பாளர் எம்.எம்.பதுர்தீன் ஆசிரியர் தலைமையில், மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பாளர் ஏ.எல்.ஏ.சிப்லி ஆசிரியர் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.உஸைர் இஸ்லாஹி கலந்து கொண்டார்.
இதில், வாழைச்சேனை கிளையின் புதிய சூறா சபை தெரிவும் இடம்பெற்றது. அதில் தலைவராக எம்.எம்.பதுர்தீன் ஆசிரியர், செயலாளராக எம்.ஐ.எம்.சபீக் ஆசிரியர், பொருளாளராக எம்.ஐ.எம்.பஸ்மி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வின்போது, அட்டாளச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிக்கு நியமனம் பெற்றுள்ள விரிவுரையாளர் கே.ஏ.எம்.இர்ஷாத் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

