சிறிய, நடுத்தர உற்பத்திகளை மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் ஆளுமை விருத்தி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் நேற்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர். பரீட், கருத்திட்ட முகாமையாளர் திருமதி கண்ணன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ்.எச்.எம்.முஸம்மில், ஏ.எம்.சுல்மி ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். றகுமத்துல்லாஹ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு உணவு உற்பத்தியின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ சான்றிதழ் பெறல் தொடர்பான கருத்துரைகளை வழங்கினார். அதே போன்று வியாபார பெயர் பதிவு மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துதல் எனம் தலைப்புக்களில் திருமதி எச்.எப்.எம் றிஹாஸ், திருமதி பிரேமா கெளரீஸ்வரன் ஆகியோரும் வளவாளர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விளக்கமளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *