மட்டக்களப்பில் மனைப் பொருளாதாரத்தை உயர்த்தும் முகமாக யுவதிகளுக்கு கைத்தொழில் பயிற்சி

மனைப் பொருளாதாரத்தை உயர்த்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு வீட்டிலிருக்கின்ற யுவதிகளுக்கு பல துறைகள் சார்ந்து இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.

 

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாயப்பற்றிருக்கின்ற யுவத்திகளுக்கு வீடுகளிலிருந்தவாறே அதிகளவு வாருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக அம்மன் மகளிர் இல்ல பௌண்டேசன் மற்றும் பொண்டானா பௌண்டேசன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து யுவதிகளுக்கு வருமானமீட்டும் தொழில்களுக்குரிய பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

 

அந்த வகையில் மட்டக்களப்பு கூழாவடி கிராமத்தில் அழகுக்கலைப் பயிற்சி, புதூர் கிராமத்தில் ஆரிவேர்க் பயிற்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களான தம்மானம்வெளி கிராமத்தில் தென்னை ஒலையில் கைப்பணிப் பொருள் உற்பத்தி பயிற்சி, உன்னிச்சைக் கிராமத்தில் கேக் மற்றும் இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

முற்று முழுதாக இலவசமாக நடாத்தப்படும் நான்கு மாதங்கள் கொண்ட இப்பயிசி நெறிமுடிவில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும், பின்னர் இதில் பயிற்சிகளைப் பெற்றக் கொண்டிருக்கும் சுமார் 80 யுவதிகள் தாமாகவே தத்தமது வீடுகளிலிருந்தவாறே சுயதொழில்களை ஈட்டுவதற்கு இது ஒரு பெரும் வாய்யப்பாக அமையும், என அம்மன் மகளில் இல்ல பௌண்டேசனின் பணிப்பாளர் வி.வாமதேவன் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *