அட்டாளைச்சேனை பொது நூலகத்தின் பட்டய நூலகர் ஏ.சீ. அன்வர் சதாத் நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எல். நஸீறா அட்டாளைச்சேனை பொது நூலகத்திற்கு நூலகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தம்பலகாமம், களுவாஞ்சிகுடி, பொத்துவில், நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் ஏற்கனவே கடமையாற்றியுள்ளார்.
இவரது கடமையேற்பு நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாப்புத்தீன், நிந்தவூர் பிரதம முகாமத்துவ உத்தியோகத்தர் றிஹானா சித்தீக், நிந்தவூர் பொது நூலகத்தின் பட்டய நூலகர் ஏ.சி.அன்வர் சதாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

