அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் ரீ. சிவஞானசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
“எங்கள் தாதியர்கள் எங்கள் எதிர்காலம் வலுவூட்டப்பட்ட தாதியர்கள் உயிர்களை காப்பாற்றுகின்றனர்.” எனும் கருப்பொருளில் சர்வதேச தாதியர் தினம் இம்முறை கொண்டாடப்பட்டு வருகின்றது. தாதியர்கள் பணிகள் தொடர்பில் அதிதிகளினால் சிறப்புரையாற்றப்பட்டதுடன், தாதியர்களினால் கவிதை மற்றும் பாடல்கள் பாடப்பட்டதுடன் சபையோரின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர். ரீ.எம்.றியாஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ. காதர், தாதிய பரிபாலகர் பி.ரி.நௌபர், வைத்தியசாலை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

