அம்பாறை மாவட்டம் பொத்துவில் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ரொட்டை கிராமத்தை சேர்ந்த 2025 க.பொ.தர.உயரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த ஐந்து மாணவர்களையும் கௌரவிற்கும் நிகழ்வு பொத்துவில் ரொட்டை அருள்மிகு வீரையடிப்பிள்ளையார் ஆலயத்தின் நிர்வாகத்திரின் அனுசரனையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் குறித்த மாணவர்கள் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்களுடன் மேளதாள வாத்தியங்களின் முழக்கத்துடன் வரவேற்கப்பட்டு ஆலயநிர்வாகத்தினரால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிற்கப்பட்டனர்.
மேலும் இவ் நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள், மாணவர்கள், சமுக நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


