மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத் தேரர், ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அம்பிட்டிய தேரர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, இதுவரை தாம் பின்பற்றி வந்ததாகக் கூறப்படும் “ராஜபக்ஷ நிகாய” அரசியல் சார்பு அமைப்பிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சந்திப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியான கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.

