இரணைமடுக்குளத்தில் யானை தாக்கி முதியவர் படுகாயம்

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன்பிடிக்கச் சென்ற 65 வயதுடைய ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் சைக்கிளில் தூண்டில் மீன்பிடிக்கச் சென்றபோது திடீரென யானை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானவரை அப்பகுதியில் இருந்த மீனவர்கள் உடனடியாக மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *