ஏறாவூரில் நிலத்தை தோண்டும் போது பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம், வாள் மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக நேற்று (20) அத்திவாராம் தோண்டும் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஒன்றும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காணியில் சம்பவ தினமான நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிலத்தை தோண்டும் போதே இந்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறியப்படுத்தியதையடுத்து அதனை பொலிஸார் மீட்டனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *