களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஜனாதிபதியினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திரு. தினேஷ் என்பவரே இவ்வாறு ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றுக்கொண்டவராவார்.
களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற குறித்த பெரும் குற்றச்சம்பவத்தின் பின்னர் நீண்டகாலமாக பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, திரு. தினேஷ் தனது கடமை நேரத்தில் மிக நுணுக்கமாக செயற்பட்டு கைது செய்திருந்தார்.
இவரது இந்த அர்ப்பணிப்புள்ள மற்றும் துணிச்சலான சேவையை பாராட்டி, இலங்கை அதிபர் தோழர் அநுர குமார திஸாநாயக்கயினால் இவருக்கான விசேட வெகுமதி ஜனாதிபதியின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை உணர்வை நாட்டின் உயரிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டமை ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

