பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலச்சம் ரூபா பணம், பொருட்கள் திருட்டு

மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நகரில் தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலட்சம் ரூபா பணம் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் நேற்று (20) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது

 

நகரில் ஜனாதிபதி வகையை முன்னிட்டு முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் பொலிஸார் மற்றும் இரவு பகலாக பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் பஸ் வண்டிகள் நிறுத்தும் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னாள் உள்ள இரு புடவைக்கடை ஒரு இலத்திரணியல் மற்றும் கைதோலைபேசிகள் விற்பனை செய்யும் கடைகளின் பூட்டை அலவாங்கால் உடைத்து கடைகளுக்குள் திருடர்கள் உட்சென்றுள்ளனர்.

 

அங்கிருந்து மேசை இலாச்சிகளை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *