கிளிநொச்சி தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சட்டவிரோதமாக பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகளை வெட்டி கடத்த முற்பட்ட ஒருவரை தர்மபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரச காட்டுப் பகுதியில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி மரங்கள் வெட்டப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக தர்மபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபரையும் மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற கப்ரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

