மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுகாமம் பகுதியில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் வேணுக்கன் சுமேதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர், தனது கணவருடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்ததாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக கணவன் – மனைவிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்ததாகவும், மன உளைச்சலில் இருந்த சுமேதா நேற்று முன்தினம் (20) உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

