அம்பாறையில் பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

சுமார் 1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினல் இன்று (22) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

அம்பாறை நகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வர்த்தக சமூகம் ஒரு சட்டப்பூர்வமான மற்றும் முறையான இடத்தில் தமது வியாபாரங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும், அம்பாறை மாவட்ட மக்களின் கலாசார வாழ்க்கையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கங்களாகும்.

 

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த பலநோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

 

நவீன தொழில்நுட்பத்துடனான அரங்கு, வர்த்தக வளாகம், அலுவலக வளாகம் மற்றும் பாரிய அளவிலான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பலநோக்கு கட்டிட வளாகத்தின் நிர்மாணப் பணிகள், 2028.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

பல வருடங்களாக அம்பாறை நகர சபையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அங்கு தொழிலாளராகப் பணியாற்றிவரும் ஈ. டி. ஹேமச்சந்திரவும் இந்நிகழ்வில் ஒரு அதிதியாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *