கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு

கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர் இன்று(23) அதிகாலையில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய சிறையில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் நியை பொலிஸாரால் நேற்று (22) இரவு 8.00 மணியளவில் 1500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ தினமான இன்று அதிகாலை 4.30 மணியளவில்  உடல் நலக்குறைவால் சிறைக்கூடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற உத்தவை பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *