பட்டிருப்பு கல்விவலயத்தின் வலயமட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் களுதாவளை தேசிய பாடசாலையில் வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சி. மனோகரன் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி ச. சுதாகரன், த. கோகுலகுமாரன், மேற்கு கல்வி வலய சி. தீபதர்சன், உட்பட பட்டிருப்பு வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பிரதான வீதியில் இருந்து பாரம்பரிய கொட்டு இசை முழங்க அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். மாணவர்களினால் தீபம், கோலாட்டம், கும்மி, சுளகு ஆகிய நடனங்கள் அணிவகுக்க வலய மட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் ஆரம்பமாகின.
இங்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

