பாசிக்குடா கடற்கரையில் சிரமதானப்பணி

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக “சுத்தமான கடற்கரைகளை கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களாக மாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில்
“நாடு முழுவதுமுள்ள கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்” இன்று(23) காலை 07 மணி தொடக்கம் மதியம் 11.30 வரை இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜென்றல் ஜனக பல்லேகும்பர கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்ந், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.ஜீ.எஸ்.சஞ்ஜீவ, கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஷிஹான் டிலங்க, கல்குடா பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எம்.ஏ.றஹீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்பாட்டாளர் க.திலீப்குமார், கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்குடாவுக்குப் பொறுப்பான முகாமையாளர் எம்.எச்.எம். மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வெலிகந்தை, புனாணை, நாவலடி இராணுவ முகாம் அதிகாரிகள், கல்குடா பொலிஸ் நிலைய அதிகாரிகள், கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், பாசிக்குடா உல்லாச உணவகங்களின் உத்தியோகத்தர்கள், சாரணர் அமைப்பினர், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதன்போது சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *