நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கியை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அவசர தேவைக்காக மின்பிறப்பாக்கியை அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

நெடுந்தீவு பிரதேசத்தில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற மின்சார தடை காரணமாக மக்களும், வைத்தியசாலை நிர்வாகமும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது.

 

இது தொடர்பாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறீபவானந்தராஜா மற்றும் இளங்குமரன் ஆகியோரது நடவடிக்கையினால் மின்சார சபையால் மின் தடை சீரமைக்கப்பட்டது.

 

இந்நிலையில் நேற்று(12) உடனடியாக வைத்தியசாலையின் அவசரத் தேவைக்காக ஓர் மின்பிறப்பாக்கி நெடுந்தீவினை நோக்கி அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *