அம்பாறையில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பகுதியில் நேற்று (23) மாடுகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்த போது, திடீரென காட்டு யானை ஒன்று தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் நாவக்காடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, வயல்வெளி அருகே புல் வெட்டிக் கொண்டிருந்த நேரத்திலேயே காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருக்கோவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *