நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் அம்பாறை மாவட்டம் அறுகம்பே பகுதியில் இலங்கை இராணுவத்தின் பொத்துவில் கோமாரி 242 படைப்பிரின் ஏற்பாட்டில் 242ஆம்படைப்பிரிவின் பிரிகேடியர் துஷார ஹல கோறல்ல தலைமையில் கீளின் ஸ்ரீ லங்கா கடற்கரை துப்பரவுப்பணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட
அரசாங்க அதிபர் அனுபமா மங்கல விக்ரமாராச்சி, அம்பாறை மாவட்ட இராணுவ 24வது கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் டிலுவ பண்டார, அம்பாறை மாவட்ட Senior காவல் கண்காணிப்பாளர், விமானப்படை கட்டளை அதிகாரி, விசேட அதிரடிப்படை அத்தியட்சகர், பொத்துவில் பிரசே செயலாளர், பொத்துவில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், பொத்துவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, பொலிஸார், முப்படையினர், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இவ் துப்பரவு பணியானது அறுகம்பே கடற்கரை முழுவதுமாக இடம்பெற்றதுடன் கலந்து கொண்டவர்களுக்கு இராணுவத்தினரினால் நீர் ஆகாரங்கள், காலை உணவு என்பன வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் இராணுவத்தினர், படைப்பிரிவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் குறித்த துப்பரவு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

