கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் இன்று(13) கிளிநொச்சி  பஸ் தரிப்பு நிலையத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது.

 

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *