மட்டு விமானப்படை முகாம் முன்பு விபத்து; வாவியில் வீழ்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

மட்டு திருப்பெருந்துறை, 04வது குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கதிர்செல்வன் பரமநாதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 

குறித்த விமானபடை முகாமிற்கு அருகில் திருப்பெருந்துறை செல்லும் வீதியில் சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு அருகிலுள்ள வாவிக்குள் வீழ்ந்ததையடுத்து இளைஞன் நீரில் மூழ்கினான்.

 

 

இதையடுத்து விமானப் படையினர் பொதுமக்கள் வாவியில் இருந்து இளைஞனை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *