ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கந்தளாயில் பெருநாள் தொழுகைகள்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் பேராற்று வேலி ஜும்மா பள்ளிவாயல்களில் இன்று காலை 6.30 மணியளவில் விசேட பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.

 

இலாஹியா ஜும்மா பள்ளிவாயலின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் ஏ. நாபில் அஸாதி பெருநாள் தொழுகையை நடத்தி வைத்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவம் மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகளை எடுத்துரைக்கும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

 

மேலும், நாட்டில் நிரந்தர சமாதானமும் நிலையான அபிவிருத்தியும் நிலவ வேண்டுமென இறைவனிடம் விசேட துஆ பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

 

தொழுகைக்காக கந்தளாய் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

 

தொழுகையைத் தொடர்ந்து, மக்கள் ஒருவருக்கொருவர் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *