தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில், ஹஜ் பெருநாளை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 அரச மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் தொடர்பான வழக்கு எதிர்வரும் 03.06.2026 அன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்.

