சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேற்று(28)  இடம்பெற்றது.
ஆண்கள், பெண்கள் என
ஒரே தடவையில், குறிக்கப்பட்ட உரிய நேரத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ்இமாம் உஷாமா பரீட் (ஸஃதி) தொழுகையையும் துஆ பிரார்த்தனையும் மேற்கொண்டார்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ் எம். முபாரக், செயலாளர் எம்.ஐ.ஏ. அஸீஸ், பொருளாளர் அல்ஹாஜ் ஏ.எம். சமீம் உட்பட நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், பெண்கள் உட்பட சிறுவர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவும் புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு பின் ஒருவருக்கொருவர் முஸாபஹா  செய்து புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *