வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த 25.05.2026 அன்று நந்திக்கடல் புனித நீரில் விளக்கு வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பமானது.

 

தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இவ்வுற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

 

இதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

 

பால்காவடி, பறவைக் காவடி, ஆணிப்பாதம், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களுடன் இரவு பகலாக பொங்கல் நிகழ்வுகளும் பக்திப் பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

 

ஆலய வளாகம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகள் பக்தர்களின் பெருந்திரளால் நிரம்பிய நிலையில், மத நம்பிக்கையுடனும் பக்தி உணர்வுடனும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *