ஓட்டமாவடி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் காலாண்டுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் ஏற்பாட்டில் அபிவிருத்திக்குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

இதன் போது பிரதேசத்தின் யானைகளால் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, வீதி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி, கால்நடை, வீட்டுத்தோட்டம், காணி, இறால் வளர்ப்பு போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

 

அத்துடன், தீர்வு பெறப்படாத விடயங்கள் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன், உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், பிரதி திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், பிரதேச திணைக்களங்ககளின் தலைவர்கள், சமுக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *