ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று(31) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 646 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற ஒருவர்; கைது செய்யப்பட்டுள்ளதுடன் 648 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, சந்தேக நபர்களிடமிருந்து 302 கிராம் ஹெரோயின், 375 கிராம் ஐஸ், 448 கிராம் கஞ்சா, 85,005 கஞ்சா செடிகள், 05 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 01 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 174 போதை மாத்திரைகள், 45 கிராம் மதனமோதகம் மற்றும் 12 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

