ஹஜ்ஜுப்பெருநாள் மற்றும் வெசாக் வாரத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வு இன்று(01) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளரும் நலன்புரிச்சங்கத் தலைவருமான ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், நலன்புரிச்சங்கச்செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.முஸ்தபா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

