லெஜண்டரி அக்கடமி கிழக்கின் சமர் கிரிக்கெட் வெற்றிக்கிண்ணத்தை சுபிகரித்தது

கிழக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகள் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் (30, 31) இரு தினம் இடம் பெற்ற போட்டியில் திருகோணமலை லெஜண்டரி அக்கடமி இவ்வருடத்திற்கான கிழக்கின் சமர் கிரிக்கெட் போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

 

நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமியின் ஸ்தாபகரும் தலைவருமான பெனடிக் மோசஸ் தலைமையில் இடம் பெற்ற கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்றன.

 

3வது வருடமாக தொடர்ச்சியாக இடம்பெறும் இரு நாட்களைக் கொண்ட இப் போட்டிகளில் 16, 14, மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறார்களின் திறமையை வெளிப்படுத்தும் களமாக அமைந்தது.

 

இப் போட்டியில் திருகோணமலையைச் சேர்ந்த லெஜன்ட்ரீ கிரிக்கெட் அக்கடமி, மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த நியூ ஈஸ்ரன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி அணியினருக்கும் இடையிலான போட்டியில் லெஜன்ட்ரீ கிரிக்கெட் அக்கடமி இப் போட்டியில் வெற்றி வாகை சூடியது.

 

இந் நிகழ்வில் மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அபுர் ரிஷான், இலங்கை விமானப்படை பொறியாளர் வி.விஜிதரன் கிரிக்கெட் வீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *