பல்முக வறுமையை ஒழித்து கிராமிய அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்தின் கணேசபுரம் கிராம அலுவலர் பிரிவில் நெல்லினை உலரவிடும் தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று(02) நடைபெற்றது.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து ரூபாய் 25,000 மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி
மற்றும் யாழ் மாவட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், திட்ட உத்தியோத்தர், கிராம அலுவலர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

