“ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்கள்”; ஏறாவூர் நகரத்திற்கான பிரதான நிகழ்வு

வாழைச்சேனை
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற மகுடத்தின்கீழ் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும்; சமூக சக்தி தேசிய நிகழ்வின் மட்டக்களப்பு – ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கான பிரதான வைபவம் பிரதேச செயலாளர் முஸம்மில் தலைமையில் இன்று(02) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரஜாசக்தி உறுப்பினர்கள், சமூக சக்தி பயனாளிகள், மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சமூக சக்தி திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் மக்கள் நல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கென சுமார் இருபத்தெழு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியின்மூலம் சிறிய ஆடைத் தொழிற்சாலை உருவாக்கம், சிறுகைத்தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல் மற்றும் மிராகேணி வாராந்த சந்தைக்கட்டடத்தின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்தல் போன்ற ஆறு வகையான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசாங்கத்தின் இத்திட்டத்தில் நூற்றுக்கணக்கணக்கானவர்கள் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *