கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அவசர காலநிலை மாற்றம் எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்று வருகிறது.

 

அதற்கமைய இன்று(02) கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது.

 

மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற குறித்த கருத்தரங்கில் மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் கலந்து கொண்டு குறித்த செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.

 

பாடசாலை அதிபர் எஸ்.ஜோன் செல்வரட்ணம், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் விமல் டிலக்மினி மற்றும் சுற்றாடல் உத்தியோகத்தர் சி.லதீஸ்குமார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *