நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் அவ்வப்போது, மணித்தியாலத்துக்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
எனிவே, பலத்த மழை மற்றும் காற்று தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

